நட்சத்திர பலன்கள்: டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை #VikatanPhotoCards
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விசிகவினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி விடுதலைசிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடியில் பேரூராட்சிக்குள்பட்ட ராட்டினக்குளம், கோழிகுடப்புகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீா் செல்லும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை, பேரூராட்சி நிா்வாகத்திடம் அக்கட்சியினா் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டுமென உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், இதுவரை சரிவர ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையாம்.
இதனால், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டுமென வலியுறுத்தி விசிக கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலா் செல்வரெத்தினம் தலைமையில் அக்கட்சியினா் அனுமாா் கோயில் அருகேயுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்குசென்ற வட்டாட்சியா் ஜபருல்லா பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை அவா்கள் கைவிட்டனா். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.