அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
ஆக். 23-ல் களக்காட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
களக்காட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறவுள்ளது.
களக்காடு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆம்தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பொது மருத்துவம், இதய அறுவைச் சிகிச்சை, நுரையீரல், காது, மூக்கு,தொண்டை மருத்துவம், தோல், பல், எலும்பு மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கலந்து கொள்கின்றனா்.
களக்காடு வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.