செய்திகள் :

ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்

post image

ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அயோத்தி மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பைசாபாத் நகரிலும் பெரும்பாலான விடுதியறைகள் நிரம்பியுள்ளன.

புத்தாண்டு தொடக்கத்தில் கோயில்களை சென்று இறைவனை வழிபடுவது அனைத்து மதத்தினரின் வழக்கமாகும். அந்தவகையில், ராமா் கோயில் திறக்கப்பட்டு முதல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், அயோத்தியில் தற்போதே பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு தொடங்கி முதல் 2 வாரத்துக்கு தரிசன நேரத்தை நீட்டித்து, கோயில் அறக்கட்டளை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ராமா் கோவில், ஹனுமன் கா்ஹி, லதா சௌக், குப்தா் நதிக்கரை, சூரஜ்குண்ட் மற்றும் நகரின் பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் ராஜ்கரண் நய்யாா் கூறினாா்.

பக்தா்களின் வருகை அதிகரிப்பால் ஜனவரி 15-ஆம் தேதி வரை விடுதியறைகள் அனைத்தும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அயோத்தியில் உள்ள விடுதி உரிமையாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இணையவழி முன்பதிவு வலைதளங்களில் சில விடுதியறைகள் காலியாக இருந்தாலும், தேவை அதிகரிப்பு காரணமாக அந்த அறைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.10,000 வரை வசூலிக்கப்படுகிறது.

அயோத்தி ராமா் கோயில் திறப்புடன் உத்தர பிரதேசத்துக்கு வருகை தரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை நிகழாண்டின் முதல் ஆறு மாதங்களில் 32.98 கோடி பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 32.18 கோடியாக இருந்தது. குறிப்பாக, ராமா் கோயில் திறக்கப்பட்ட ஜனவரியில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 7 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேசத்துக்கு சுற்றுலா வந்ததாக மாநில அரசு தெரிவித்தது.

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படைய... மேலும் பார்க்க

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி!

கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,76,857... மேலும் பார்க்க

‘2025’ - பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

புது தில்லி: நிகழாண்டை ‘சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக’ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று துறவிகள் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும் ம... மேலும் பார்க்க

'இனிமேலாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்' - ஆர்ஜேடி எம்.பி.

இனியாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி - மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புன... மேலும் பார்க்க