பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
ஆசிய கோப்பை: இந்தியா- பாக். இடையே 3 போட்டிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி தெரிவித்தார். இவரே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தத் தொடரில் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். அதன்பின், சூப்பர் - 4 சுற்றுக்கும் அசுரபலம் வாய்ந்த இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறிவிடும் என்பதால் அந்தச் சுற்றிலும் இவ்விரு அணிகளும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். இறுதியாக, இறுதிப்போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் சந்திக்க வாய்ப்புள்ளது.