ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!
ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பந்துவீச பணித்தது.
இந்தியாவில், பஹல்காம் தாக்குதலில் எதிர்வினையாக பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் ஆட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், மிகுந்த பரபரப்புக்கிடையே தொடங்கிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்துவீச்சில் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான், முதல் 10 ஓவர்களில் 49 ரன்கள் மட்டுமே திரட்டி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து, எளிய வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.