ஆசிய போட்டி 2026: மீண்டும் கிரிக்கெட் தக்கவைப்பு!
ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருக்குமென ஓசிஏ (ஒலிம்பிக் கவுன்சில் ஆஃப் ஏசியா) உறுதியளித்துள்ளது.
ஆசிய போட்டிகள் ஜப்பானில் வரும் செப்.19 முதல் அக்.4ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன.
நகோயா நகரத்தில் ஏஐஎன்ஏஜிஓசி அமைப்பின் கூட்டத்தில் கிரிக்கெட், மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் இரண்டும் சேர்க்கப்பட்டதாக ஓசிஏ தெரிவித்துள்ளது.
இதில் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 வடிவில் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் இடங்கள், அணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட இடம் குறித்து தகவல் ஏதுவும் கூறப்படவில்லை.
ஆசிய போட்டிகளில் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 2010, 2014, 2023இல் கிரிக்கெட் போட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.