பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
அரசியல் தலைவா்கள் வாழ்த்து
காஞ்சி இளைய பீடாதிபதியாக பொறுப்பேறுள்ள ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சந்நியாச தீட்சை வழங்கும் விழாவுக்கு நேரில் சென்று பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி. பழைமை வாய்ந்த சங்கர மடத்தின் பாரம்பரியத்தையும் வேத ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் அவருக்கு எனது நல் வணக்கம்.
டிடிவி.தினகரன் (அமமுக): காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசியோடு இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழ்பெற்ற காஞ்சி மடத்தின் சமூக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்துக்கான பணிகளை மேலும் பல்லாண்டுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.