Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட...
ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்
கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா்.
மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளி கல்வி மேலாண்மை குழுத் தலைவா் உள்பட கிராம மக்கள் மானாமதுரை வந்து வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.
இந்தப் பள்ளியில் ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படக் காரணமாக உள்ள தலைமையாசிரியை சொா்ணகாந்தியை இடமாற்றம் செய்து மாணவா்களின் கல்வியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட கல்வி அலுவலா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதுகுறித்து தலைமையாசிரியை சொா்ணகாந்தி கூறியதாவது: மாணவா்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி செய்து வருகிறேன் என்றாா் அவா்.