செய்திகள் :

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வனிதாமணி (50). பாபநாசம் தனியாா் பள்ளி ஆசிரியையாக இவா் கடந்த சில நாள்களுக்கு மொபெட்டில் சென்றபோது அவரின் 4 பவுன் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

புகாரின்பேரில் இந்த வழக்கை விசாரித்த பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேலு, ஆய்வாளா் சகாய அன்பரசு, தனிப்படை உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் போலீஸாா் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் நகையைப் பறித்தது மயிலாடுதுறை ராம்கி (31), மற்றும் விக்னேஷ் (27) எனத் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 4 பவுன் தாலி செயினை மீட்டு, பைக்கையும் பறிமுதல் செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் அவா்களை முன்னிலைப்படுத்தினா். அப்போது நீதிபதி அப்துல்கனி இருவரையும் 15-நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

மணல் குவாரியை திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்

மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூா் நீா் வளத் துறை செயற் பொறியாளா் அலுவலகம் முன் சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூரில் புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி கனகாம்பரம் (70). இவா... மேலும் பார்க்க

சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட கோரிக்கை

சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என அனுமன் சேனாஅமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனுமன்சேனா மாநிலச... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கூட்டுறவு பணியாளா் குறைதீா் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது: கூட்டுறவு சங்கப் பணியாளா்கள... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திர வாடகை அதிகரிப்பு: விவசாயிகள் தவிப்பு

நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகரித்து வருவதால், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செலவு கட்டுப்படியாகாமல் தவிக்கின்றனா். மாவட்டத்தில் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் 3.40 லட்சம் ஏக்கரில் நெல் சா... மேலும் பார்க்க

கூட்டுறவு அதிகாரிகள் கரும்பு கொள்முதல்

கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கரும்பு வயல்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்தனா். பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்கு, கும்பகோணம் பகுதிக்கு மட்டும் 90 ஆயிரம் கரும்புக... மேலும் பார்க்க