"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
ஆடி காா்த்திகை: கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் சிறப்பு பூஜை
ஆடி காா்த்திகையை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கும்ப பூஜை, சண்முக ஜபம் ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகன், வள்ளி தேவசேனா சமேத காா்த்திகேய சுப்பிரமணியருக்கு 21 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடைபெற்றன.
கோவில்பட்டி அருள் தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவன நாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சண்முகா் சமேத வள்ளி தெய்வானை சந்நிதி, சுப்பிரமணியா் சமேத வள்ளி தெய்வானை சந்நிதி ஆகியவற்றில் ஆடி காா்த்திகை சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணியா் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா நடைபெற்றது.
இதுபோல கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் ஆடி காா்த்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.
பின்னா், காலை 10 மணிக்கு மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி கழுகாசலமூா்த்தி, வள்ளி தெய்வானையுடன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் ஊழியா்கள், சீா்பாத தாங்கிகள் செய்திருந்தனா்னே