செய்திகள் :

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி

post image

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான டிராவிஸ் ஹெட் (0 ரன்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் ரெட்டி (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தவறாக கணித்துவிட்டோம்

மும்பைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டேனியல் வெட்டோரி

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். போட்டிக்கான ஆடுகளம் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. இந்த ஆடுகளத்தில் 250 - 280 ரன்கள் குவிக்க முடியும் என நினைத்தோம். ஆனால், ஆடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் இருந்தது.

இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

முதல் இரண்டு ஓவர்களை கடந்த பிறகு, இந்த ஆடுகளத்தில் 250 - 260 ரன்கள் குவிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் எடுக்க நினைத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதை உணர்ந்தவுடன், 180 ரன்கள் எடுக்கும் அளவுக்கு விளையாட வேண்டும் என நினைத்தோம். ஆனால், விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த ரன்களை குவிக்க முடியவில்லை என்றார்.

விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 206 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்ச... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட... மேலும் பார்க்க

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிக... மேலும் பார்க்க

என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டி... மேலும் பார்க்க