விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சமூக நீதிக்காகவும், மக்கள் உரிமைக்காகவும் போராடுவதில் பாமக முன்னிலையில் உள்ளது. தமிழகத்துக்கும், மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்மொழி, இனம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக மட்டுமன்றி, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும் தமிழகம் உயர வேண்டுமெனில், தமிழகத்தில் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும். அது பாமகவின் உரிமையும்கூட. அதை வென்றடுக்க உறுதியேற்போம் என அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.