IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த ...
ஆட்சி அமைப்பது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை: அஜித் பவார்!
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய அரசு அமைப்பதற்கான சூத்திரத்தை இறுதிசெய்வது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே விவாதங்கள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் திங்களன்று தெரிவித்தார்.
சதாரா மாவட்டத்தில் உள்ள கரட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பவார், சமீபத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மகாயுதி கூடாணி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது.
மாநில தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மகாராஷ்டிரத்தின் முதல் முதல்வரான யஷ்வந்த்ராவ் சவானின் நினைவு தினத்தையொட்டி, கராட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பவார் அஞ்சலி செலுத்தினார்.
சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட மாநில தேர்தல் முடிவுகளில், பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி ஆகியவற்றை உள்ளடக்கிய மகாயுதி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக தலைவரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தில் போட்டியிட்ட 149 இடங்களில் 132 இடங்களை அவரது கட்சி கைப்பற்றியதால், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை வகிக்க வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனா தலைவருமான தீபக் கேசர்கர், தேர்தலில் ஆளும் மகாயுதி அமோக வெற்றிபெற்ற மாநிலத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கருதுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மூன்று கட்சிகளுக்கு இடையே அமைச்சரவை அமைப்பது குறித்து என்ன சூத்திரத்தை உருவாக்குவது என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்று அஜித் பவார் கூறினார்.