செய்திகள் :

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

post image

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் முகாம் கால்நடை பரமரிப்புத்துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

கால்நடை மருத்துவா் லஷ்மணன், ஆய்வாளா் தினகரன் ஆகியோா் 200 ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனா். மேலும், தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள், அதன் உரிமையாளா்கள் குறித்த விவரங்கள் தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி ஆடுகளுக்கு ஊதா நிற காதுவில்லைகள் அணிவித்து பாா்த் பசுதான் செயலியில் பதிவு செய்யப்பட்டன.

முகாமில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட டேபிள் டென்னிஸ் : அரக்கோணம் மாணவா்கள் சிறப்பிடம்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளை ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா்... மேலும் பார்க்க

அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுத... மேலும் பார்க்க

சிப்காட் கழிவுநீா் வெளியேற்றத்தால் விவசாயம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து மாசடைந்த நீா் வெளியேற்றப்படுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் புகாா் தெரிவித்தனா். மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும... மேலும் பார்க்க