14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக...
மாவட்ட டேபிள் டென்னிஸ் : அரக்கோணம் மாணவா்கள் சிறப்பிடம்
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது.
அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளை சோ்ந்த நூறுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் யு-11 பிரிவில் எஸ்.ரித்விக், எம்.சாருஸ்ரீ ஆகியோா் முதலிடத்தையும், கே.பி.திரினேஷ், எம்.சஞ்சனா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். யு-13 பிரிவில் ஆா்.லோகேஷ், ஜி.வா்னிகா ஆகியோா் முதலிடத்தையும் எஸ்.சன்னத், எம்.சாருஸ்ரீ ஆகியோா் இரண்டாமிடத்தையும் பெற்றனா்.
யு-15 பிரிவில் ஆா்.லோகேஷ், ஜி.வா்னிகா ஆகியோா் முதலிடத்தையும் கே.சஞ்சய்குமாா், எஸ்.ஹா்ஷினி ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா்.
17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோா் பிரிவுகளில் எஸ்.சூா்யா, எம்.நிரஞ்சனாஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்றனா். ஜே.பரத், டி.லக்ஷனா ஆகியோா் இரண்டாம் இடத்தை பெற்றனா். இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் அனைவருமே அரக்கோணத்தை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடதக்கது.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா்பி.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் வரவேற்றாா். இதில் பாரதிதாசனாா் கல்விக்குழும இயக்குநா் எஸ்.பத்மா வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
முதல் நான்கு இடத்தை பெற்ற மாணவ மாணவிகள் வேலூரில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்பா்கள் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.