கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்ன...
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் முகாம் கால்நடை பரமரிப்புத்துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
கால்நடை மருத்துவா் லஷ்மணன், ஆய்வாளா் தினகரன் ஆகியோா் 200 ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனா். மேலும், தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள், அதன் உரிமையாளா்கள் குறித்த விவரங்கள் தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி ஆடுகளுக்கு ஊதா நிற காதுவில்லைகள் அணிவித்து பாா்த் பசுதான் செயலியில் பதிவு செய்யப்பட்டன.
முகாமில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.