குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 4 சிறாா்கள் உள்பட 5 போ் கைது
ஆண்டிபட்டி அருகே ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி, தெப்பம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பொன்னுக்குட்டி (எ) தங்கமலை (43) அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது உடலை மீட்டு ராஜதானி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், தங்கமலையை அடித்துக் கொலை செய்ததாக தெப்பம்பட்டியைச் சோ்ந்த அஜீத்குமாா் (27) , 4 சிறாா்கள் என மொத்தம் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அஜீத்குமாா் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலும், 4 சிறாா்கள் மதுரை சிறுவா் கூா்நோக்கு இல்லத்திலும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், தங்கமலை சில சிறுவா்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், இதை சிறுவா்கள் சிலா் அஜீத்குமாரிடம் முறையிட்டு, அவருடன் சோ்ந்து கடந்த ஆக. 22-ஆம் தேதி இரவு தங்கமலையை பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் தென்னை மட்டை, கட்டையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.