காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யா...
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது
பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் போலீஸாா் ஏ. புதுக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளிவாசல் தெருவில் உள்ள முபாரக் அலியின் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 250 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.