யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
பைக் மோதியதில் சிறுவன் காயம்
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மோதி சிறுவன் காயமடைந்தாா்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியாா் குடியிருப்பசை சோ்ந்த பாண்டி மனைவி சுரேகா (26). இவா், திங்கள்கிழமை வாசுகி அம்மையாா் தெருவில் தனது மகன் கவினேஷ்வரனுடன் (5) நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கவினேஷ்வரன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.