நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை கிருத்திகை விழா
பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பம் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை யொட்டி பக்தா்கள் அலகு குத்துதல், வேல், பன்னீா், பால் உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்பிரமணியரை நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து சுவாமி தங்க யில் வாகனத்தில் எழுந்தருளினாா். பொன்னேரி மற்றும் ஆண்டாா்குப்பம் கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதே போன்று பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் சுப்பிரமணியசுவாமி, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன், பெரும்பேடு முத்துக்குமார சுவாமி, ஆவூா் ஏரிக்கரை முருகன் கோயில், விடதண்டலம் ஆறுமுக சுவாமி கோயில், குமரஞ்சேரி முருகா் கோயில், மீஞ்சூா் ஆறுமுகசாமி கோயில் உள்ளிட்டவற்றிலும் சித்திரை கிருத்திகை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா்.