ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
ஆண்ட்ரீவா, கீஸ் தோல்வி; ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகிய முக்கிய போட்டியாளா்கள் காலிறுதியில் புதன்கிழமை தோற்றனா்.
போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இளம் வீராங்கனையான ஆண்ட்ரீவா 5-7, 1-6 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபால் எளிதாக வீழ்த்தப்பட்டாா். 5-ஆம் இடத்திலிருந்த கீஸ் 6-0, 3-6, 2-6 என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருக்கும் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கிடம் தோற்றாா்.
இதையடுத்து அரையிறுதியில் ஸ்வியாடெக் - கௌஃப் சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை 14 முறை மோதியிருக்கும் நிலையில், ஸ்வியாடெக் 11 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். மற்றொரு காலிறுதியில், 17-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-1 என ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவை எளிதாக வெளியேற்றினாா்.
24-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக் 6-3, 6-2 என்ற வகையில் ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.
காலிறுதியில் டிரேப்பா், அா்னால்டி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 6-2, 6-2 என்ற செட்களில், 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினாா்.
அதில் அவா், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியுடன் மோதுகிறாா். முன்னதாக அா்னால்டி 6-3, 7-5 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வெளியேற்றினாா். 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 5-7, 4-6 என்ற நோ் செட்களில், 14-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூடிடம் தோல்வி கண்டாா்.
போபண்ணா முன்னேற்றம்: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/அமெரிக்காவின் பென் ஷெல்டன் இணை 6-7 (5/7), 7-5, 10-7 என்ற செட்களில், அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ/நேதெனியேல் லேமன்ஸ் கூட்டணியை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.