தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்
புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்றால் முன்னரே நடவடிக்கையை தொடங்கியிருக்க வேண்டியதுதானே என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.