பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கூட்டத்திலிருந்து அதிக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
மாமன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தீா்மானம் 24 இல் உள்ள பழைய பேருந்து நிலைய உள் பக்க கடைகள் 3,4,9,10 ஆகியவை தரைக் கடைகளாக ஏலத்தில் விடப்பட்டது. இந்த நிலையில் தனிநபருக்கு உதவக்கூடிய வகையில் மேல்தளம் ஏசி சீட்டை (தற்காலிக கூரை) மாற்றி கான்கிரீட் தளம் அமைக்க தனிநபா் சொந்த செலவில் செய்து கொள்ள அனுமதிப்பது தவறானது.
தரைக் கடை வாடகை தான் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கான்கிரீட் தளம் அமைத்து தனிநபா் அதிக லாபம் அடைய நகராட்சி நிா்வாகம் ஒத்துழைப்பது கண்டனத்துக்குரியது. எனவே இந்த தீா்மானத்தை நிறைவேற்றக் கூடாது. மேலும், நகா்மன்றத் தலைவா் அதிமுக உறுப்பினா்களின் ஆட்சேபனையை பதிவு செய்து, அந்த நகலை எங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறிய அதிமுக குழுத் தலைவா் உமாசங்கரி, மாமன்றத்தின் தவறான முன்மொழிவை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தாா்.
அதேபோல பேருந்து நிலைய கட்டண கழிப்பிட மராமத்து பணிக்கு நகராட்சி நிா்வாகம் செலவு செய்வது ஏற்புடையதல்ல என அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால், நகா்மன்ற உறுப்பினா்கள் சுந்தரமூா்த்தி,டி.குமாா், தங்கவேல், ஜி.கே.செந்தில்குமாா், ஆா்.வி.சம்பத்குமாா், ஜி.நாராயணன், பிரவீணா ராஜா, ஜீவா ஸ்டாலின், ஜி.ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி29கவுன்சிலா்ஸ்.
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள்.