ஜம்மு & காஷ்மீர்: அரசு அலுவலங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை - ஏன்?
ஆன்லைன் பயணிகள் ரயில் முன்பதிவு தேதியை மாற்ற கோரிக்கை
மயிலாடுதுறை: ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களும் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை:
ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கு பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றால், அந்த டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ள பட்சத்தில், அந்த தேதியில் பயணம் செய்ய முடியாமல், வேறு தேதியில் பயணம் செய்தால் டிக்கெட் கவுன்ட்டரில் சென்று 24 மணி நேரத்தில் முன்னதாக வேறு நாள்களில் இடம் இருந்தால் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என ரயில்வே விதி இருக்கிறது.
டிக்கெட் கவுன்ட்டரில் பணம் கொடுத்து முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
ஆனால், அண்மைக்காலமாக ரயில் பயணிகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வலியுறுத்தப்படுகின்றனா். அவ்வாறு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள், பயணத்துக்கு இடைப்பட்ட நாள்களில் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது முடியாது.
இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் பயண தேதியை மாற்றம் செய்ய முடியாமல், டிக்கெட்டை கேன்சல் செய்து, பயணம் செய்ய முடியாமல் சிரமம் அடைகின்றனா். எனவே, ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பவா்களும் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிா்வாகம் விதியை திருத்தம் செய்ய வேண்டும்.