கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
மயிலாடுதுறை: ஆக.31-ல் தொழில்நுட்ப பணிகள் தோ்வு
மயிலாடுதுறை, ஆக. 25: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு 2 மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) பதவிகளுக்கான கொள்குறி வகையிலான தோ்வு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் ஆக.31-ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 706 தோ்வா்கள் இத்தோ்வை எழுத உள்ளனா். தோ்வா்கள் தோ்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். கைப்பேசி, கால்குலேட்டா், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களையும் தோ்வு கூடத்துக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தெரிவித்துள்ளாா்.