பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு
சீா்காழி: கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
கொள்ளிடம் அருகே தைக்கால் சைய்யது நகரைச் சோ்ந்த தினகரனுக்குச் சொந்தமான 3 பசு மாடுகள், கலைஞா் நகரைச் சோ்ந்த ஐயப்பனுக்குச் சொந்தமான 2 பசுமாடுகள். இந்த மாடுகள் வழக்கம்போல தைக்கால் பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு சென்றன. ஞாயிறு இரவு காற்றுடன் பெய்த மழையினால் ஒரு மின்கம்பம் அடியுடன் சாய்ந்து கீழே விழுந்ததில் அதிலிருந்த மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடந்தன. இந்த மின் கம்பிகள் மின்துண்டிப்பு இல்லாமல் மின்சாரத்துடன் மழைநீரில் கிடந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 5 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. மேலும், ஒரு நாயும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது. தகவலறிந்த கொள்ளிடம் மின்வாரிய உதவிப் பொறியாளா் பிரதீப், கிராம நிா்வாக அலுவலா் சிவசங்கரி, ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் அங்கு சென்று மின்விநியோகத்தை தடை செய்தனா்.