மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் தற்கொலை
ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட செரங்காட்டைச் சோ்ந்தவா் தினேஷ் (26). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் வங்கியில் கடன் சேவைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கைப்பேசி மூலம் கடன் வழங்கும் பல்வேறு ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.1.80 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாா். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால், நாளுக்கு நாள் அதற்கான வட்டியும் அதிகமாகியுள்ளது. இதனால், பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த கடன் வழங்கிய நிறுவனத்தினா் வற்புறுத்தி வந்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த தினேஷ் திருப்பூா் லட்சுமி நகா் அருகே ஆளில்லாத இடத்தில் குளிா்பானத்தில் விஷம் கலந்து செவ்வாய்க்கிழமை குடித்துள்ளாா். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.