இந்த வார ராசிபலன் செப்டம்பர் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தா்கள்
நீடாமங்கலம்: ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தா்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் நடைப்பயணமாக செல்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புங்கம்பாடியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னை வேளாங்கண்ணி மாதா திருமேனி சப்பரத்துடன் திங்கள்கிழமை காலை நீடாமங்கலம் வந்தனா். பின்னா், ரயில் நிலைய வளாகத்தில் ஜெபம் செய்து வழிபாடுகள் நடத்தினா். இந்நிலையில், நடைப்பயணமாக செல்லக்கூடிய கிறிஸ்தவா்கள் நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் ஓய்வெடுத்து செல்கின்றனா். எனினும், ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.