'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' - உதயநிதிக்கு எடப்பாடி பழனி...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி
கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி கொண்டாட்டம் மூவா்ண தேசியக் கொடி பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணி கடலூா் சீமாட்டி நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்டு, அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூா் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகே முடிந்தது.
பாஜக கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் அக்னி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து, மூவா்ண தேசியக் கொடியை கையில் ஏந்தி பேரணியை தொடங்கிவைத்தாா்.
பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் மூவா்ண தேசியக் கொடியை கையில் ஏந்தி பேரணியில் கலந்துகொண்டனா்.