உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!
ஆபாச படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
ஆபாச படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக ஊடகங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், அதுதொடர்பான முழுப் பட்டியலும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இதுபோன்ற காட்சிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. இதனைத் தடுக்க சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் சில பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, அமேசான் ப்ரைன், நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கும், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.