F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
ஆப்கனில் சீனர் கொலை! தலிபான் அரசு அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஷ்கர் மாகாணத்தில் பயணம் செய்தபோது ‘லீ’ எனும் பின்பெயரைக் கொண்ட சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக தலிபான் காவல் துறையின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அக்பர் தெரிவித்துள்ளார்.
தஷ்த்-இ-காலா எனும் மாவட்டத்தை நோக்கி தனது மொழிப்பெயர்பாளர் ஒருவருடன் லீ பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தனது பயணம் குறித்து தெரிவிக்காமல் சென்றுள்ளார். ஆனால், அவருடன் சென்ற அவரது மொழிப்பெயர்பாளர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!
இந்நிலையில், லீ யின் கொலைக்கு அந்நாட்டை சேர்ந்த நேஷனல் மொபிலைசேஷன் பிரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தலிபான் உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் குறித்து பயிற்சி அளித்து வந்ததினால் தாங்கள்தான் அந்த சீனரின் வாகனத்தை தாக்கி அவரை கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது, ஆப்கானிஸ்தானிலுள்ள சீன தூதரகம் அந்நாட்டிலுள்ள சீன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை அவர்கள் தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் வெளிநாட்டினர் கொல்லப்படுவது மிகவும் அரிதான ஒன்று. ஆனால், கடந்த 2022 டிசம்பர் மாதம் தலைநகர் காபுலிலுள்ள சீன உணவகத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தங்களது நாட்டினரை நாடுத் திரும்ப சீனா வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.