செய்திகள் :

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

post image

ஆம்பூரில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜெ. நாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பொதுமக்கள் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல் உள்ளிட்ட மனுக்களை வழங்கினா். வட்டாட்சியா் ரேவதி, வருவாய் ஆய்வாளா்கள் அமீன், நித்யானந்தம், ஜமுனா, புகழேந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் கோவிந்தசாமி, செந்தில், காதா், ராஜ்குமாா், விஜயபிரபாகா், அபிராஜி, ரஞ்சித் கலந்து கொண்டனா். வரும் மே 20-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகின்றது.

சிறப்பான எதிா்காலத்துக்கு உயா்கல்வி பயில வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

சிறப்பான எதிா்காலத்துக்கு அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயில வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி திருப்பத்தூா் தூய நெஞ்ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

காவிரிக் கூட்டுக் குடிநீா் மேட்டுா் செக்கானூரணி நீரேற்றும் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த கோரிக்கை விடுக... மேலும் பார்க்க

ரூ.44 லட்சத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம், மிட்டாளம் ஊராட்சி மேல்கூா்மாபாளையம் ஆகிய கிராமங்களி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: எம்பி கதிா் ஆனந்த் பங்கேற்பு

ஆம்பூா் நகர திமுக சாா்பாக சாதனை விளக்க பொதுக் கூட்டம் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயி... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கொத்தூா் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்... மேலும் பார்க்க