பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!
ஆம்பூரில் பிரதோஷ வழிபாடு
ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை கமண்டீஸ்வரா் கோயில், சின்னகொம்மேஸ்வரம் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், வடச்சேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை சோமசுந்தரேஸ்வரா் கோயில், குமாரமங்கலம் அருள்மிகு மங்கலநாயகி உடனுறை மங்கலஈஸ்வரா் கோயில், மாதனூா் அருள்மிகு ஆத்மநாத ஈஸ்வரா் கோயில்களில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.