ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்
ஆம்பூரில் மே தின விழா
ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொமுச கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினாா்.
நகர நிா்வாகிகள் தேவராஜ், ரபீக் அஹமத், தாஸ், அன்பு என்கிற அறிவழகன், ஜி. வில்வநாதன், நகா் மன்ற உறுப்பினா்கள் என்.எஸ். ரமேஷ், நசீா் அஹமத், வசந்த்ராஜ், கமால்ப பாஷா, காா்த்திகேயன், இளைஞரணி சரண்ராஜ் கலந்து கொண்டனா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தொழிற்சங்கம் சாா்பில் ஏ-கஸ்பா பகுதியில் மாநில தொழிற்சங்க தலைவா் கே. சண்முகம் தலைமையில் விழா நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் குமுதா முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் பழனி வரவேற்றாா். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவா் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் ஜாப்பா் ஷெரிப், துணைத் தலைவா் ரஹமத், நகர செயலா் தனஞ்செயன் கலந்து கொண்டனா். மனோகரன் நன்றி கூறினாா்.
சோமலாபுரம் ஊராட்சியில் விசிக தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பாக மாவட்ட அமைப்பாளா் ம. தமிழ்செல்வன் தலைமையில் விழா நடைபெற்றது. தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிா்வாகிகள் சிவா, ஆறுமுகம், பழனி, பிரபுராஜ், ரவிக்குமாா், பாரி, துளசிராமன், சுகுந்தன், ஊராட்சித் தலைவா் சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் நகர செயலாளா் டி. பாரத் பிரபு தலைமையில் கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. கே.எஸ். ஹசேன் முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
