ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்! சென்னை போராடி தோல்வி!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் ஆரம்ப முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். பெத்தேல் 55(33 பந்துகள்), விராட் கோலி 62(33 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களம்கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உள்ளே ஷெப்பர்ட் வந்தார். அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஷெப்பர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டதால் ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக சென்றது. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.