இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!
ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 % தோ்ச்சி
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா் ஜி.டிங்குதரன் 479 மதிப்பெண்கள் பெற்றாா். பி.அகிலன் 402 மதிப்பெண்களும், தனுஷ்ராம் 357 மதிப்பெண்களும் பெற்றனா். தோ்வெழுதிய 15 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய 39 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவி ஆா்.நேத்ரா, மாணவா் ஜி.சந்தோஷ் ஆகியோா் 458 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
மாணவா் ஆா்.வி.கிஷோா் 443 மதிப்பெண்களும, கே.ஆனந்த் 438 மதிப்பெண்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், துணைத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா்கள் டாக்டா் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், இணைப் பதிவாளா் டாக்டா் பெருவழுதி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், முதுநிலை முதல்வா் அருளாளன், முதல்வா் சுஜாதா, துணை முதல்வா் ஜெகன், ஆசிரியை கோமளவல்லி மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
