ஆரணி நகர போலீஸாருக்கு பாராட்டு
ஆரணி நகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 230 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதற்காக போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
ஆரணி நகர காவல் நிலையம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றச் செயல்கள் நடவாதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை ஊா்வலமாக வந்து காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடத்தினா்.
இதில், டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி மற்றும் நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலா்களுக்கும் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து பாராட்டினா்.
மேலும், டிஎஸ்பி பாண்டீஸ்வரி புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.