பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் முதலில் மேற்குவங்கம் அல்லது ஒடிசாவைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் தில்லியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர் பெயர் ராஜூ விஸ்வகர்மா என்பதும், அவருக்கு 28 வயது என்றும் தில்லியைச் சேர்ந்தவர் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டிருக்கும் ராஜூ விஸ்வகர்மாவை இன்று காலை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு கும்மிரப்புண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
கவரப்பேட்டை காவல்நிலையத்தில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி கடந்த 12ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர் வெள்ளிக்கிழமை சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றவாளி மீதான விசாரணை இரண்டாம் கட்டத்தை எட்டிய நிலையில் அவர் முற்பகலில், நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
சூளூர்பேட்டையில் கைது
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 14 நாள்கள் கழித்து வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டவர் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது புகைப்படம், சிறுமியிடம் காட்டப்பட்டு அவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கவரப்பேட்டை காவல் நிலையம் வந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், குற்றவாளியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார் பின்னர் அவர் பேசுகையில், பல சவால்களைக் கடந்து சிரமங்களுக்கிடையே குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவர்தான் குற்றவாளி என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் பாலியல் குற்றவாளி குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.