செய்திகள் :

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

post image

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்சிபி கேர்ஸ் நிதியுதவி அறிவித்துள்ளது.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஆர்சிபி கேர்ஸ் (RCB Cares) அறிவித்துள்ளது. முன்னதாக, ஆர்சிபி நிர்வாகம் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்தது.

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர்.

மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த துயரமான சம்பவத்தையடுத்து, கர்நாடக அரசு மற்றும் அம்மாநில காவல்துறை மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிக்க:அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!

RCB announce Rs 25 lakh each for families who lost members in Bengaluru stampede

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் கொரியாவை வீழ்த்தியது மலேசியா, வங்கதேசமும் வெற்றி

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது மலேசியா. மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேயை 8-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வங்கதேசம். ஆசிய... மேலும் பார்க்க

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிா் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோா் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ... மேலும் பார்க்க

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

பிரான்ஸ் தலைநகரில் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். சா்வதேச பாட்மின... மேலும் பார்க்க

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்: ஹாக்கி மகளிா் அணி கேப்டன்

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளாா். சீனாவின் ஹாங்ஷௌ நகரில் செப்.5-ஆம் தேதி ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்ட... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படத்தில் வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரு... மேலும் பார்க்க