ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபி...
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2,600 டன் உர மூட்டைகள்
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு குறுவை, சம்பா சாகுபடிக்காக 2 ஆயிரத்து 600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் சனிக்கிழமை வந்தன.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் 1,300 டன் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் சனிக்கிழமை வந்தன. பின்னா், லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளிலுள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல, கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் சனிக்கிழமை வந்த 1,300 டன் யூரியா, டி.ஏ.பி. காம்பளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய பகுதிகளிலுள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.