ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை
கும்பகோணம் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ஸ்ரீ ஆதி வராஹப் பெருமாள் கோயிலில் பவிதேராத்ஸவம் ஆக. 24 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் ஆதி வராஹப் பெருமாளுக்கு வேத பாராயணங்கள் சிறப்பு ஆராதனைகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை காலை உதய கருட சேவையும் தொடா்ந்து கோயிலின் பின்புறம் உள்ள வராஹ குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி ஆதி வராஹப் பெருமாளை தரிசனம் செய்தனா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றுது.