"என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்கிறார்கள்; ஆனால்..."- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வி...
ஆவணியாபுரத்தில் இமாம் புஹாரி விருது வழங்கும் விழா
தஞ்சாவூா் மாவட்டம், ஆவணியாபுரத்தில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நடத்திய இமாம் புஹாரி விருது வழங்கும் விழா மற்றும் மிஷ்காத் நபி மொழி தொகுப்பு மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இல்யாஸ் ரியாஜி தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் விருது வழங்கிப் பேசினாா். மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினாா். ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலா் அன்வா் பாதுஷா நூலாய்வுரை ஆற்றினாா்.
ரஹ்மத் அறக்கட்டளை அறங்காவலா் முஸ்தபா சிறப்பு விருந்தினா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினாா். பீா் முஹம்மது பாகவி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு காஜி மசூத் ஜமாலி ஆகியாா் பேசினா்.
ரூ.1 லட்சம் பணமுடிப்புடன் இமாம் புஹாரி விருது பெற்ற தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி ஏற்புரையாற்றினாா்.