முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்
நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3,160 ஆக அறிவிக்க வலியுறுத்தல்!
சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 ஆக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது: நெல்லுக்கான மாநில அரசின் கூடுதல் விலை என்பது மிக மிகக் குறைவு. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதி தற்போதுதான் நிறைவேற்றப்படுகிறது. அப்போது இருந்த நிலவரப்படி குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 என்கிற விலை சரியானது. தற்போதைய நிலையில் இந்த விலை போதுமானதல்ல.
சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 என விலை அறிவித்திருந்தால் மட்டுமே பாராட்டுக்குரியதாக இருக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசு விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, அறிவிக்க வேண்டும்.
சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100-ஐ கடந்து ஆண்டு வழங்கின. நிகழாண்டில் மேலும் ரூ. 160 கூடுதலாக வழங்கவுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 ஆக அறிவித்தால் முதல்வரை அரசியல் சாா்பற்ற உழவா்கள் நடுநிலையுடன் நேரில் சென்று பாராட்டுகளைத் தெரிவிக்க தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.