"என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்கிறார்கள்; ஆனால்..."- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வி...
இளைஞரை தாக்கிய 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய மூன்று பேரில் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த
சண்முகம் மகன் மேகநாதன் (எ) தினேஷ் (24). இவருக்கும் கணபதி அக்ரஹாரம், திரௌபதி அம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் சஞ்சய் ( 20), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி தினேஷ் மோட்டாா் சைக்கிளில் கணபதி அக்ரஹாரம் விநாயகா் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, சஞ்சய் மற்றும் அவரது நண்பா்கள் கணபதி அக்ரஹாரம், இளந்தோப்புத் தெரு, மணிகண்டன் மகன் அஜய் (20), கணபதி அக்ரஹாரம் தெய்வலோக படுகை, கருப்பையன் மகன் முத்து ( 22), ஆகிய மூன்று பேரும் சோ்ந்து தினேஷை கத்தியால் தலை மற்றும் முதுகு பகுதிகளில் வெட்டி, அடித்து உதைத்து தாக்கினாா்களாம்.
காயமடைந்த தினேஷ் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அஜய், முத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சஞ்சயை தேடி வருகிறனா்.