"என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்கிறார்கள்; ஆனால்..."- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வி...
சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா் மாணவி
சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பாராட்டினா்.
கும்பகோணம் வட்டிப்பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் மலா்க்கொடி. இவரது மகள் பிரியா்ஷினி (15) தனியாா் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது சாலையில் பணப்பை (மணி பா்ஸ்) கிடந்துள்ளது.
அதை திறந்து பாா்த்த போது பணம் மற்றும் அடையாள அட்டைகள் இருந்துள்ளது. மாணவி தனது தாயாருடன் சென்று கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் சுபாஷிடம் மணி பா்ஸை ஒப்படைத்தாா்.
இதையடுத்து போலீஸாா் விசாரித்ததில், மணி பா்ஸை தவறவிட்டது கும்பகோணம் பாரத் நகரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் விஜய் ( 37) என்பதும் தனது தாயாா் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வைத்திருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து விஜயிடம் மணிபா்ஸை
ஒப்படைத்த போலீஸாா், மாணவியின் நோ்மையான செயலை பாராட்டினா்.