வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு!
பந்தநல்லூா் அருகே குறிச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே குறிச்சியைச் சோ்ந்தவா் இலக்கியா தேவி (33). இவரது கணவா் ராஜசேகா் இறந்துவிட்டாா். இவா் அணைக்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த இலக்கியா, வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
மறுநாள் காலை வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்தாா். அப்போது பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா், அறைக்குள் சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, மோதிரம், மூக்குத்திகள் 3, வெள்ளி குத்துவிளக்கு, பணம் ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். அதன்பேரில், திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. ராஜூ நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். துப்பறியும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்களை கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.