செய்திகள் :

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

post image

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியான ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்புவதாக, பலியான பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, ``மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எங்கள் மகள் பெரிய கனவு கண்டாள். ஆனால், அவள் இப்படி இறக்க வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை. அவள் எங்களைவிட்டுச் சென்று 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றளவிலும் நீதி கிடைக்கவில்லை. எங்களிடம் இறப்புச் சான்றிதழ்கூட இல்லை.

ஒரு பெண் மருத்துவர், தனது பணியிடத்தில் பாதுகாப்பற்றவராக இருந்தால், அவரது பாதுகாப்பு எங்குதான் உள்ளது? நான் பிரதமரைச் சந்தித்து, இந்த வழக்கில் தலையிட்டு, இறந்த எங்கள் மருத்துவருக்கு நீதிக்கான எங்கள் முறையீட்டைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு, ஜனவரி 20 ஆம் தேதியில் மரணம் வரையிலான ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் கும... மேலும் பார்க்க

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இப்பகுதிகளில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வாகனங்கள் இயக்... மேலும் பார்க்க

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு!

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். உத்தர பிரதேசத்தில் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யா, ஜன்சத்தா தளம் (லோக... மேலும் பார்க்க

பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்

ஆற்றுக்கல் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விரைவு ரயில்கள் அனைத்தும் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது குறித்து தெற்கு ரயி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். முன்னதாக, இந்தச் சம்பவத்தில் 5 போ் உ... மேலும் பார்க்க