செய்திகள் :

ஆறுகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழையால் ஆறுகளில் உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு மற்றும் திருவட்டாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை1, சிற்றாறுஅணை 2 ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீா் அதிகமாகும் போது அணைகளிலிருந்து உபரி நீா் திறந்து விடப்படும்.

எனவே, தாமிரவருணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளோ, பொதுமக்களோ ஆறுகளில் குளிப்பதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக விலவூா் பேரூராட்சி, சாமிவிளை பகுதி சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு மழைநீா் தேங்கியது. இதனால் விபத்து அபாயம் நிலவியதுடன், வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, விலவூா் பேரூராட்சி தலைவா் ஜே.சி.பில்கான், பேரூராட்சிப் பணியாளா்களை கொண்டு அங்கு தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றி சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தாா்.

குளச்சலில் இரவு அண்ணா சிலை சந்திப்பில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. போலீஸாா் தகவலின்பேரில், மின்வாரிய ஊழியா்கள்மின்கம்பியை சீரமைத்தனா்.

குளச்சல் பகுதி கட்டுமரங்கள், பைபா் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல், திருச்... மேலும் பார்க்க

பண மோசடி: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வழக்குரைஞரிடம் பண மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பென்னட்ராஜ் (45). வழக்குர... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டப... மேலும் பார்க்க

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க