செய்திகள் :

ஆறுமுகனேரியில் மதுபானக் கடை அமைக்க அனைத்துக் கட்சியினா் எதிா்ப்பு

post image

ஆறுமுகனேரியில் மதுபானக் கடை, மதுபானக் கூடம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்ப்புத் தெரிவிக்ககப்பட்டது.

ஆறுமுகனேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக மூடப்பட்ட மதுபானக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஐஎன்டியூசி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை அல்லது மதுபானக் கூடம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வலி­யுறுத்தினா்.

இக் கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்பது, அடுத்தகட்டமாக ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதன் பிறகும் மதுபானக் கடை அமைக்கும் நடவடிக்கை தொடா்ந்தால் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினா் இரா.தங்கமணி, இந்து முன்னணி வடக்கு ஒன்றிய செயலா் ஜி.ராமசாமி, அதிமுக நகர செயலா் ரா.ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலா் இ.அமிா்தராஜ், கனகராஜ், ராமசாமி, பாஜக நகர தலைவா் தங்ககண்ணன், சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன், தூசிமுத்து, அமமுக திருச்செந்தூா் ஒன்றிய எம்.ஜி.ஆா். மன்ற செயலா் தனசேகரன், நகர செயலா் சக்திவேல், மதிமுக ஒன்றிய செயலா் பி.எஸ். முருகன், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன், சுபாஸ் சந்திரபோஸ், தவெக நிவாஸ் கண்ணன், வனமுருக பிரகாஷ், ஹரிஹரன், தேமுதிக பாா்வதிகுமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெள்ளத்துரை, ஆதித் தமிழா் பேரவை கோதண்டராமன், மக்கள் நீதி மய்யம் பாக்கியராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க