செய்திகள் :

ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!

post image

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சம் மாவட்டத்தில் ராமாயப்பட்டணா மற்றும் கட்டூரூ ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த மார்ச்.10 அன்று ராமாயப்பட்டணா கிராமவாசிகள் அவர்களது படகுகள் எளிதாக கடலுக்குள் செல்வதற்காக, அப்பகுதியில் ஓடும் பஹுதா ஆறு கடலுடன் இணையும் பகுதியில் புதியதொரு முகத்துவாரம் தோண்டியுள்ளனர். இதற்காக, அங்குள்ள படலனா நீர்நிலையின் பகுதிகளையும் கட்டூரூ கிராமத்தின் எல்லைக்குட்பட்ட நிலத்தையும் அபகரித்து இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பெரும்பாலும் படலனாவை நம்பி மீனவத் தொழில் செய்து வரும் கட்டூரூ கிராமவாசிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த புதிய முகத்துவாரத்தை மீண்டு மண்ணால் மூடி புதைத்துள்ளனர். இதனால், இரு கிராமவாசிகளுக்கிடையே மோதல் வெடிக்கும் சூழல் நிலவியுள்ளது.

இதையும் படிக்க:நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

இந்நிலையில், அக்கிராமங்களின் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினர் முன்னிலையில் இரண்டு கிராமவாசிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த கூட்டத்தில் இரண்டு கிராமவாசிகளும் ஒருவரையொருவர் கட்டைகளால் அடித்துக்கொண்டும், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தில், 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட கட்டூரூ கிராமவாசிகள் 5 பேருக்கும், ராமாயப்பட்டணா கிராமவாசிகள் 10 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இந்த மோதல் சம்பவத்துக்கு காரணமான 40 பேரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொர... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார். மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க